அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக இன்றய தினம் கவனயீர்ப்பு பேரணி(காணொளி)

19384 0

உணவு ஒறுப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக இன்றய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் வரை கவனயீர்ப்பு பேரணியை நடாத்தவுள்ளனர்.

நாளை வெள்ளிக்கிழமை அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு மாகாணத்தில் முழு அளவிளான பணிப்புறக்கணிப்புக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையை தமிழர் விடுதலை கூட்டணி, ஜக்கிய சோசலிச கட்சி, புதிய ஜனநயக மார்க்சிஷ லெனிஸிஷ கட்சி, தமிழ் மக்கள் பேரவை, தமிழ் சிவில் அமையம், அரசியல் கைதிகள் விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, சமுக நீதிக்கான வெகு ஜன அமைப்பு, அகில இலங்கை சைவ மாகாசபை உட்பட ஈ.பி.ஆர்.எல்.எவ், புளட் ஆகிய கட்சிகள் இணைந்து வெள்ளிக்கிழமை பணிபுறக்கணிப்பு போராட்டத்திக்கு அழைப்பு விடுந்துள்ளனர்.

Leave a comment