வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள், யாழ்ப்பாணம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்;டனர்.
சுகாதார தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து, ஆளுநர் செயலகத்தின் நுழைவாயிலை மறித்து பதாகைகளுடன் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
ஆளுநர் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட சுகாதார தொண்டர்கள், ஆளுநர் அலுவலக அதிகாரியிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.