அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று குழு இன்று கூடவுள்ளது.
அண்மையில் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆhப்பாட்டத்தின் போது, நீர்த்தாரை தாக்குதல் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டன.
இதில் பலர் காயமடைந்தனர்.
இதுதொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இந்த ஒன்றுக்கூடலில் ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.