ஜனாதிபதியை சந்தித்தது விமல் வீரவங்க தலைமையிலான குழு

245 0
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட அந்த கட்சியின் உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர்.
இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் நேற்று மாலை 5.30 அளவில் இடம்பெற்றது.
இதன்போது தேசிய சுதந்திர முன்னணியினால், 3 முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலான கடிதம் ஒன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
அரசியல் யாப்பு குறித்த வழிநடத்தல் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை மற்றும் கடந்த தினங்களில் சில சட்டமூலங்களை நிறைவேற்றும் போது அரசாங்கத்தினால் கையாளப்பட்ட அணுகுமுறை மற்றும் இலங்கையை துண்டாடும் சர்வதேசத்தின் நோக்கம் ஆகியவற்றுடன் பௌத்த மகாநாயகர்களுக்கு எதிராக தற்போது மேற்கொள்ளப்படும் அவமரியாதையான செயல்பாடுகள் குறித்து அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் வரை நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment