ஹெரோயின் கடத்தப்படுவது, மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. 

247 0
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஹெரோயின் கடத்தப்படுவது, மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தேசிய பாதுகுhப்பு கற்றைககளுக்கான நிறுவகம் இதனைத் தெரிவித்துள்ளது.
உலக மதுஒழிப்பு தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடுகள் தொடர்பான கைதுகள், 2015ஆம் ஆண்டு 23 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
அத்துடன் மேல் மாகாணத்திலேயே அதிக அளவிலான போதைப் பொருள் பயன்பாடும் அதுதொடர்பான கைதுகளும் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment