இலங்கையில் டெங்கு மீண்டும் தீவிரமடையக்கூடும் 

309 0
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, டெங்கு நோய்ப்பரவல் அதிகரிப்பு மீண்டும் தீவிரமடையக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணம் என்பவற்றில் நிலவும் மழையுடனான காலநிலை, டெங்கு நோயை பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தநிலையில் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு நுளம்பு ஒழிப்ப வேலைத்திட்டம் தொடந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 394 பேர் மரணித்துள்ளனர்.
அத்துடன் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 24 பேர் டெங்கு நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
000000000
792 பில்லியன் ரூபாய் பயன்படுத்தத்தாமல் இருக்கிறது
2016 வரவுசெலவு ஒதுக்கத்தில் 792 பில்லியன் ரூபாய் பயன்படுத்தப்படாதிருப்பதாக மகிந்த அணியினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றிடம் முறையிடவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துள குணவர்தன தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் அடிப்படையில் 3 ஆயிரத்து 898 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
அதில் 3 ஆயிரத்து 106 பில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டதாகவும் எஞ்சிய தொகை கைவைக்கப்படாமலேயே உள்ளது.
இதன் ஊடாக மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment