சுகாதார அமைச்சினுள் அத்துமீறி உள்நுழைந்து அங்குள்ள பொருட்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியபீட மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் மாளிகாகந்த மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.