பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பில் மக்களை தெளிவூட்ட வேண்டும் – பைசர் முஸ்தபா

240 0

புதிய அரசியல் முறைமை மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பில் சரியான முறையில் மக்களுக்கு தெளிவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, இது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்றை விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

Leave a comment