ரயில் சாரதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆரம்பித்துள்ள திடீர் வேலைநிறுத்தத்தினால், கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து ஆரம்பிக்கும் சகல ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த திடீர் அறிவிப்பிற்கு ரயில் நிலையங்களில் கூடியிருந்த பயணிகள் தங்களது பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால், அப்பகுதியில் பதற்ற நிலையொன்று ஏற்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.