பிள்ளைகளை காப்பாற்ற கசிப்பு விற்ற தாய்!! பிள்ளைகளைப் பொறுப்பேற்றது நீதிமன்றம்.
வறுமை காரணமாகக் கசிப்பு உற்பத்தி செய்ததாகத் தெரிவித்த பெண்ணின் 3 பிள்ளைகளையும் நீதிமன்றுக்கு அழைத்து அவர்களைச் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறு பணித்தது நீதிமன்று.
கசிப்பு உற்பத்தி செய்த குற்றச்சாட்டில் குடும்பப் பெண் நேற்றுமுன்தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு சாவகச்சேரி நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு வந்தது. தனக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் வறுமை நிலையில் வாழ்வதால் கசிப்பு உற்பத்தி செய்ததாகக்கூறி தன்மீதான குற்றத்தை அவர் ஏற்றுக்கொண்டார்.
இதனையடுத்து அவரைப் பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்று பிள்ளைகளை மன்றில் முற்படுத்துமாறு பணித்திருந்தது. அதன்படி 3 பிள்ளைகளும் நேற்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அதன்போதே மூவரையும் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறு நீதிமன்று பணித்தது. குறித்த குடும்பப் பெண் மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.