வடக்குப் பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், இம்மாத இறுதிக்குள் அவற்றை நிறுத்திக்கொள்ளாவிட்டால் கொடூரமான முறையில் தண்டிக்கப்படுவர் என குறிப்பிட்டு, கிளிநொச்சியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என பெயரிடப்பட்டு, கிளிநொச்சியின் முக்கிய இடங்களில் இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக சண்டையிடுதல், பாடசாலைகள் ஆலயங்களுக்கு இடையூறு விளைவித்தல், போதைப்பொருள் விற்பனை போன்றவற்றில் ஈடுபடுவோர், எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் அவற்றை நிறுத்திக்கொள்ள வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இல்லாவிட்டால் மிகவும் கொடூரமான முறையில் தண்டிக்கப்படுவர் என குறித்த சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே விடயங்கள் அடங்கிய சுவரொட்டிகள், அண்மையில் யாழ்ப்பாணத்திலும் ஒட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.