வடக்கு மாகாணத்தில் கடற்படையினர் தங்கியிருப்பதை மக்கள் விரும்புகின்றனர் என்கிறார் தெற்கின் மனோ

323 0

Mano-Ganesanவடக்கு மாகாண மக்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்காக வடக்கு மாகாணத்தில் கடற்படையின் பிரசன்னத்தை விரும்புகின்றார்கள் என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், அண்மையில் நான் வடக்கிற்கு பயணம் செய்திருந்தேன். அப்போது அம்மக்கள் என்னிடம் கடற்படையினரின் பிரசன்னம் தேவையெனக் கூறினர்.

வடக்கு மக்களின் இந்த நிலைப்பாட்டை அறிந்திருப்பது அவசியம், படையினர் போரில் தவறு செய்திருந்தால் அதனைத் தண்டிக்கவேண்டும். போர் நடைபெற்ற எந்தவொரு நாட்டிலும் இது நடைமுறையிலுள்ளது.

இலங்கையில் செயற்பட்ட இந்திய அமைதிப்படையினர், ஈராக்கில் செயற்பட்ட அமெரிக்கப்படையினர், அதேபோல இலங்கையின் படையினர் எவராக இருந்தாலும், போரின்போது குற்றம் இழைத்திருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

இதனை வைத்துக்கொண்டு முழு படையினரும் தண்டிக்கப்பட போகிறார்கள் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் தெரிவித்தார்.