கம்பஹா மாவட்டத்தில் 989 மில்லியன் ரூபா செலவில் கழிவு முகாமைத்துவத் திட்டம்

239 0

கம்பஹா மாவட்டத்தில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களில் சேகரிக்கப்படுகின்ற கழிவுகளை முறையாக முகாமைத்துவம் செய்வதற்காக வேண்டி ஆரோக்கியமான கழிவு சேகரிக்கும் இடம் மற்றும் உயிரியல் வாயு உரவகைகளை உற்பத்தி செய்யும் முறைமையினை ஸ்தாபிக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையினால் 989 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட மேற்படி யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment