இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககாரவிற்கு ஒரே தடவையில் வீரராகவும் ஆலோசகராகவும் செயல்படும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள மல்டான் சுல்தான் அணியின் வீரராக விளையாடவுள்ள குமார் சங்ககார அவ்வணியின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த அணியில் சங்காவுடன் சொஹைப் மலிக், சொஹைல் தன்வீர், கிரான் பொல்லார்ட், மொஹமட் இர்பான், ஜுனைட் கான், சொஹைப் மக்ஸூத் ஆகிய வீரர்களும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது