யாழில் முதல் தடவையாக தேசிய தமிழ் தின விழா மற்றும் கலாச்சார விழா ஆகியன மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படவுள்ளது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
அத்துடன், தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மற்றும் சுகி சிவம் ஆகியோர் கலந்து கொள்ளும் பட்டிமன்றம், தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பரதநாட்டிய அக்கடமியான ‘பாரத கலாஞ்சலி’ வழங்கும் ஓம் சிவா முருகா பரத நாட்டிய நிகழ்வும் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு எதிர்வரும் 15ஆம், 16 ஆம் நாட்களில் யாழ். இந்துக்கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில், வடமாகாணத்தில் திறம்பட செயற்பட்ட கலைஞர்கள், எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள், கல்வி மான்கள், வியாபாரத்தில் மிளிர்ந்தவர்கள், சிறந்த ஊடகவியலாளர்கள் எனப் பலர் விருது வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.