மீடியாகொட தெல்வத்த பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு வருகைத்தந்த இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் , சம்பவத்தில் எவருக்கும் எந்தவித காயங்களோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை என காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீடியாகொட காவற்துறையினர் மேற்கொள்கின்றனர்.