அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு பதில் பணிப்பாளராக கடமையாற்றுவதற்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதர்ஷன குணவர்தனவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது.
இன்று (10) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் இதற்கான பிரேரணையை அமைச்சரவைக்கு முன்வைத்துள்ளார்.
இதற்கு முன்னர் அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய ரங்க கலன்சூரிய கடந்த வாரம் தனது பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.