இராஜாங்க அமைச்சர் T.B. ஏக்கநாயக்க தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளனர்.
T.B. ஏக்கநாயக்க முன்னாள் கலாச்சார அமைச்சராக இருந்த போது மத்திய கலாச்சார நிதியத்துக்கு சொந்தமான கப் வாகனமொன்றை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பிலான முறைப்பாடொன்றுக்கு அமையவே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது