கைவேலி பெண்கள் அமைப்பை சேர்ந்த எம் பி ராஜேஸ்வரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2 ம் லெப் மாலதியின் நினைவாக பொதுச்சுடரினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் தி. கிந்துஜன் ஏற்றிவைத்ததை தொடர்ந்து கேப்பாபுலவு முள்ளிவாய்க்கால் கைவேலி பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் சுடர்களை ஏற்றிவைத்தனர்
தொடர்ந்து கைவேலி பெண்கள் அமைப்பின் பிரதிநிதியும் ஒரு மாவீரனின் உறவுமாகிய சிறிறஞ்சினி அவர்கள் மலர்மாலை அணிவித்ததை தொடர்ந்து அகவணக்கமும் மலரஞ்சலியும் இடம்பெற்றது
தொடர்ந்து கைவேலி பெண்கள் அமைப்பை சேர்ந்த எம் பி ராஜேஸ்வரி தலைமை உரை நிகழ்த்தினார் இதன்போது இன்று பெண்களாக நாம் தலைநிமிர்ந்து வாழ்வதற்கும் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ளவும் இன்று அரசியலில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அதிகரிக்கவும் வித்திட்டது தமீழீழ பெண்களின் எழுச்சி என தெரிவித்தார்
தொடர்ந்து சிறப்புரையினை கைவேலி பெண்கள் அமைப்பின் பிரதிநிதியும் அறநெறி ஆசிரியையுமான மல்லிகா நிகழ்த்தினார் அவர் உரைநிகழ்த்துகையில் தமிழ் தேசியத்தில் பெண்களின் பங்களிப்பு எவளவு முக்கியம் என்பதனை எமது முன்னாள் போராளிகள் எடுத்து காட்டினார்கள் என தெரிவித்தார்.