யுத்த காலத்தில் காணாமல் போனோரை கண்டுபிடித்துத் தருமாறு கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் , தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி கிளிநொச்சி – உமயால்புரத்தில் ஆரம்பமான இந்தப் பேரணி கிளிநொச்சி நகரை அடைந்து அங்குள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உப அலுவலகத்தில் நிறைவடைந்துள்ளது.
இதன்போது ஐநா அலுவலகத்தில் மகஜர் ஒன்றையும் போராட்டக்காரர்கள் கையளித்துள்ளனர்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சில வருடங்கள் ஆகின்ற போதும் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை என, ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.