டெம்பிடியே சுகதானந்த தேரர், லகிரு உள்ளிட்ட மாணவ செயற் குழுவினருக்கு தடை

241 0

டெம்பிடியே சுகதானந்த தேரர், லகிரு வீரசேகர, சுஜித பிரியங்கர பெரேரா உள்ளிட்ட மாணவ செயற் குழு உறுப்பினர்கள் எவரும், ஜனாதிபதி செயலகம் அல்லது எந்தவொரு அரச நிறுவனங்களுக்குள்ளும் அத்துமீறி நுழையக் கூடாது என கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவ செயற்குழு உறுப்பினர்கள் இன்று குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கூடவுள்ளதாக, புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

Leave a comment