புலனாய்வுப்பிரிவினரால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு உயிர் ஆபத்து

285 0

தமிழ் அரசியல் கைதிகளை கொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்து தாம் உரிய அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட் தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

அரசியல் கைதிகள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் போது “உங்களை சுட்டுக்கொல்ல வேண்டும்” என்று பாதுகாப்பு பிரிவினரால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் வகையில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அருட்தந்தை எமது செய்திப் பிரிவுக்கு கூறினார்.

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான முழுமையான பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

Leave a comment