தீபாவளியை முன்னிட்டு கைது செய்யப்பட்ட 42 இந்திய மீனவர்களை இலங்கை அரசு விடுவிக்கின்றது. இந்தியா-, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையே நடைபெற்ற சுமுகமான பேச்சு வார்த்தையின் அடிப்படையில் இந்த விடுதலை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் இராமேஸ்வரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல பிரதேசங்களைச்சேர்ந்த மீனவர்களை அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைதுசெய்தனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் இரு நாடுகளுக்கிடையிலுள்ள நல்லுறவை முன்னிட்டு எதிர்வரும் தீபா வளிக்கு முன்பதாக விடுதலை செய்யப் படவுள்ளனர்.