தமிழகம் முழுவதும் 12-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

534 0

மத்திய அரசின் கொள்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் 12-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் வே.துரைமாணிக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விவசாயத்துக்கு எதிரான பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைத்தல், ஹைட்ரோ கார்பன் எடுத்தல் உள்ளிட்ட விவசாயத்துக்கு எதிரான மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்தும், காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் காலம் தாழ்த்தாமல் அமைக்க வேண்டும். கர்நாடகம் தர வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளது.

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வருகிற 12-ந் தேதி (வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment