மியன்மாரில் நடைபெற்ற சம்பவங்களை வைத்து, எந்த சம்பந்தமும் இல்லாத, மரிக்கார்களுக்கும், அஸாத் சாலிகளுக்கும், முஜிபுர் ரஹ்மான்களுக்கும் ஆர்ப்பாட்டம் செய்ய முடியுமாயின், இந்த நாட்டிலுள்ள பிக்குகளுக்கு ஆர்ப்பாட்டம் செய்வதற்கு ஏன் முடியாது என ராவணா பலய அமைப்பின் தலைவர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
அக்மீமன தயாரத்ன தேரருக்கு நேற்று பிணை மறுக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இவ்வாறு கூறினார்.
எங்கோவுள்ள பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்களை இந்த நாட்டுடன் தொடர்புபடுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பிக்குகள் வீதியில் இறங்கினர்.
மியன்மார் அகதிகளை ஐக்கிய நாடுகள் சின்னம் பொதிக்கப்பட்ட ஒரு இடத்தில் குடியிருக்கச் செய்திருந்தால் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது. யாரும் அந்த இடத்துக்கு சென்றும் இருக்காது.