நீதிமன்ற சட்டங்களுக்கு எமது எதிர்ப்பைத் தடுத்து நிறுத்த முடியாது- வாசு

412 0

நாம் சிறைக்குச் செல்ல எதிர்பார்த்தே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றோம் எனவும், நீதிமன்ற தடை உத்தரவுகளுக்கோ, அரசாங்கத்தின் தடைகளுக்கோ எமது எதிர்ப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்த முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இந்த சட்டங்களினால் எம்மை அடக்க முடியாது. இந்த சட்டங்கள் நாய்க் குணமுள்ள சட்டங்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கூட்டு எதிர்க் கட்சி நேற்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, ஹம்பாந்தோட்ட சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

Leave a comment