நாமலின் கோரிக்கைக்கு மறுப்பு, இன்றும் ஆஜராகுமாறு பணிப்பு

317 0

கூட்டு எதிர்க் கட்சியின் ஹம்பாந்தோட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு நாமல் ராஜபக்ஷ எம்.பி. இன்றும்(10) பொலிஸுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று பொலிஸுக்கு சமூகமளித்த நாமல் ராஜபக்ஷ இன்று ஆஜராக முடியாது எனவும், இதற்கு பகரமாக வேறு ஒரு தினத்தை 25 ஆம் திகதியின் பின்னர் வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இருப்பினும், இவரது கோரிக்கைக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு,  இன்று மாலை 5 மணிக்கு ஹம்பாந்தோட்ட பொலிஸில் ஆஜராகுமாறு அவர் கேட்கப்பட்டுள்ளார்.

Leave a comment