தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

446 0

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், அவர்கள் மீதான வழக்குகளை அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வவுனியாவில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.

வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பேரூந்து நிலையம் முன்பாக இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் வழக்குளை வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து அனுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு மாற்றியுள்ள நிலையில், அவர்கள் தொடர்ச்சியாக கடந்த 16 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் உடல் நிலை மோசமடைந்துள்ள நிலையில் அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும்  இப் போராட்டம் நடைபெற்றது.

இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், புதிய மாக்சிச லெனினிச கட்சி உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Leave a comment