அமெரிக்காவின் கலிஃபோர்னியா பிராந்தியத்தில் ஏற்பட்ட தீப்பரவலால் இதுவரையில் 10 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கலிஃபோர்னியாவின் திராட்சைத் நகரம் என்று அழைக்கப்படும் வைன் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீப்பரவலை அடுத்து நாபா, சொனோமா மற்றும் யுபா ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 20 ஆயிரம் மக்கள் வெளியேறியுள்ளனர்.
தொடர்ந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
குறைந்தபட்சம் ஆயிரத்து 500 சொத்துக்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவின் ஆளுனரால் தற்போது அங்கு அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.