தமிழ் அரசியல் கைதிகள் விடயம் குறித்து அரசாங்கம் உரிய அவதானம் செலுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரப்பட்டுள்ளது.
வவுனியா நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டுவந்த தங்களின் வழக்குகள் அனுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டமைக்கு எதிராக, அனுராதபுரம் சிறையில் உள்ள 3 அரசியல் கைதிகள் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஆதரவாக வவுனியாவிலும், யாழ்ப்பாணத்திலும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
இதனை நேற்று சபையில் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், குறித்த கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்.