மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக பாதயாத்திரை

288 0

மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக இன்றைய தினம் பாரிய பாதயாத்திரை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சைட்டம் எதிர்ப்பு மாணவ இயக்கம் இதனை தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னால், சைட்டம் எதிர்ப்பு சத்தியாகிரக போராட்டம் நேற்று 50வது தினமாக இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில் அங்கு நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து சைட்டம் எதிர்ப்பு மாணவ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர இதனைக் குறிப்பிட்டார்.

மாணவர்களின் கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனத்தில் கொள்ளாமல் உள்ளது.

இந்தநிலையில் இன்றைய தினத் பாரிய பாதயாத்திரை ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment