ஏதிலிகள்  தொடர்ந்தும் போராட்டம்

369 0

இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பப்புவா நியுகினி நாட்டுக்குச் சொந்தமான மானுஸ் தீவில், தொடர்ந்தும் ஏதிலிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 68 நாட்களுக்கும் மேலாக அவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றன.

கடந்த ஜுலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம், கடந்த ஒக்டோபர் மாதம் 2ம் திகதி இலங்கையைச் சேர்ந்த ஏதிலியான ராஜிவ் ராஜேந்திரனின் மரணத்தை அடுத்து ஒருநாள் இடைநிறுத்தப்பட்டு, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது ராஜிவ் ராஜேந்திரனின் மரணத்துக்கு நீதிகேட்கும் பதாதைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, அவுஸ்திரேலியாவின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

‘ராஜிவ் ராஜேந்திரன் என்ற இன்னொரு சகோதரரையும் இழந்துவிட்டோம், அவுஸ்திரேலிய அரசாங்கமே, இன்னும் எத்தனை பேரின் உயிர்கள் வேண்டும், அவுஸ்திரேலிய நாட்டு மக்களே இது குறித்து மகிழ்வுறுகிறீர்களா?’ போன்ற சுலோகங்கள் அவர்களின் பதாதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Leave a comment