உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் வழக்குகளை மீண்டும் வவுனியா மேல் நீதி மன்றத்திற்கு மாற்றகோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.
யாழ்ப்பாண நகரின் மத்தியில், கைதிகளின் விடுதலைக்காக போராடி வரும் அருட்தந்தை சத்திவேல் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அரசியல் கட்சிகளும் இணைந்து கொண்டன.
மூன்று அரசியல் கைதிகளின் வழக்கு அனுராதபுரத்தில் இருந்து வவுனியா மேல் நீதி மன்றத்திக்கு மாற்றப்படவேண்டும், சிறையில் உள்ள அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோசங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளை துணியில் தமது கைநாட்டுகளையும் வைத்துள்ளனர்.