தேங்காய் உற்பத்தி பாரியளவில் பாதிப்பு

26435 0

தேங்காய் உற்பத்தி செய்யப்படும் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக தேங்காய் உற்பத்தி பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெங்கு செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தவிர, எதிர் வரும் இரண்டு மாதங்களில் தேங்காய் உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேங்காய் உற்பத்தி முக்கோண பிரதேசமாக கணிக்கப்பட்டுள்ள கம்பஹா, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தை விட இந்த வருட உற்பத்தி 20 சதவீதத்தால் வீழ்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளுர் நுகர்வோருக்கு மட்டும் வருடாந்தரம் 370 கோடி முதல் 390 கோடி தேங்காய் தேவைப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த எண்ணிக்கை உள்ளுர் தேவைகளுக்கே போதாமல் உள்ள நிலையில், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தெங்கு பொருட்கள் காரணமாக, உள்ளுரில் தேங்காய் விலை அதிகரித்துள்ளதாக தெங்கு உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, ஏற்றுமதிக்கான பதப்படுத்தப்படும் உலர் தேங்காய் தொழிற்சாலைகளை முன்னேடுத்துச் செல்வது நட்டத்தை ஏற்படுத்தும் விதத்தில் தற்போது அமைந்துள்ளதாக இலங்கை உலர் தேங்காய் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a comment