மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர்மனு 19ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
உயர்நீதிமன்றின் 3 பேர் கொண்ட நீதியரசர்கள் குழு இதனை இன்று அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட குறித்த சட்டமானது, அரசியல் யாப்பை மீறும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்து, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவிற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட 4 பேரினால் இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சரத் என் சில்வாவின் மனுவைப் பரிசீலித்த உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழு, இந்த மனுவை எதிர்வரும் 19ம் திகதி விசாரணைக்கு எடுப்பதாக அறிவித்தது.