கண்டி மாவட்டத்தில் புதிய அமைப்பாளர்கள் ஊடாக அதிக வீடுகள் கட்டப்படும் – திகாம்பரம்

433 0

கண்டி மாவட்டத்தில் புதிய அமைப்பாளர்கள் ஊடாக கட்டம் கட்டமாக திட்டமிட்டு அதிக வீடுகள் கட்டப்படும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டம் தொழிலாளர் தேசிய சங்க அமைப்பாளர் கே.சண்முகராஜின் ஏற்பாட்டில் கண்டி மாவட்ட பெருந்தோட்ட மக்கள் சந்திப்பும் பொது கூட்டமும் நேற்று புஸ்ஸல்லாவ மெல்போட் தோட்டத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந் நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட கண்டி மாவட்ட பெருந்தோட்டங்களை சேர்ந்த பெரும் திறலான பொது மக்களும் கலந்துக் கொண்டார்கள்.

இதன் போது கண்டி மாவட்டத்திற்கான அமைப்பாளர்களுக்கான நியமன கடிதங்களும் வழங்கப்பட்டன.

Leave a comment