ஐ.டி.எச் ஆதார வைத்தியசாலை, தேசிய தொற்றுநோய் போதனா வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ளது.
இதற்குத் தேவையான திட்டங்களை பெற்றுத் தருமாறு சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
கொட்டிகாவத்த சனச சங்க மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் கூடுதலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். தேசிய தொற்றுநோய் பிரிவு நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் முறையான சிகிச்சை வழங்கப்பட்டதால், டெங்கு நோயை கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்ததென்று அமைச்சர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.