வாகன விபத்தில் இளைஞர் பலி

431 0

கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியின் எஹலியகொட பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாவுஸ்ஸாகள்ள பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2 மணியளவில் வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதன் காரணமாகவே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment