வவுனியா – நொச்சிமோடை கிராமம் இளைஞர் மற்றும் வவுனியா சின்னகுளம் கிராம இளைஞர்கள் இருதரப்புக்கு இடையில் நேற்று (08) இரவு மோதல் இடம்பெற்றதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
கிராமத்தில் இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் காரணமாக சில வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளன.
நொச்சிமோடை கிராமத்தில் இளைஞர்கள் சிலர் சின்னக்குளம் கிராமத்தில் இளைஞர்கள் சிலர் மீது தாக்குதல் மேற்கொண்டமை காரணமாக இந்த முறுகல் நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.