அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட 8 பேருக்கு மறியல்

348 0

கல்கிசை பிரதேசத்தில் மியான்மார் அகதிகளுக்கு அச்சுறுத்தல் மேற்கொண்டமை தொடர்பில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட 8 பேரை மீண்டும் விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

குறித்த வழக்கு இன்று (09) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கல்கிசை நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன்படி அவர்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்படுவர் என அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a comment