மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட முறைமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரி முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா முன்வைத்த அடிப்படை உரிமை மனு எதிர்வரும் 19 ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
உயர் நீதிமன்றம் இந்த தீர்மானத்தை வௌியிட்டுள்ளது.
பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், புவனெக்க அலுவிகார மற்றும் நலின் பெரேரா ஆகிய மூவர் கொண்ட நீதியரசர் குழாம் இந்த மனு மீதான விசாரணையை முன்னெடுக்கவுள்ளது.
சட்டமா அதிபர் சார்பாக முன்னிலையாகியிருந்த மேலதிக வழக்குரைஞர் சஞ்சய ராஜரட்னம் அடிப்படை ஆட்சேபனையை முன்வைத்து மனுவை நிராகரிக்குமாறு கோரியிருந்தார்.
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தூய்மையான கரங்களுடன் உயர் நீதிமன்றத்திற்கு வரவில்லை என மேலதிக வழக்குரைஞர் தெரிவித்தார்.