2018 ம் ஆண்டுக்கான நிதி ஒதிக்கீட்டுச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ராஜாங்க நிதியமைச்சர் இரான் விக்ரமரத்ன இதனை சமர்ப்பித்துள்ளார்.
அண்மையில், நிதி அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவையில் முன்வைத்த ஒதிக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைய, அடுத்த வருடத்திற்கான எதிர்பார்க்கப்படும் செலவு 3,982 பில்லியன்கள் ஆகும்.
மேலும், அரச வரவு 2,175 என நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, இந்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நவம்பர் 9 ம் திகதி இடம்பெறவுள்ளது.