தோட்டக் காணியை தனியாருக்கு வழங்கியமைக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

302 0

நாவலப்பிட்டி, போகில் தோட்ட பாரண்டா பிரிவுக் காணியை தனியாருக்கு கொடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 11 மணியளவில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1972ஆம் ஆண்டு காணி சீர்திருத்த சட்டத்தின் கீழ் உரிமையாளர்களிடமிருந்து காணிகளை சுவிகரிக்கும் போது இக் காணி உரிமையாளர்களுக்கு அரசாங்கத்தினால் 50 ஏக்கர் காணி வழங்கப்பட்டது.

இதன் போது காணிகளை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தற்போது காணிகள் வழங்கி வருவதாகவும் இதனால் மக்களின் வாழ்வாதாரம் இருப்பிடம் போன்றனவற்றை இழக்க நேரிட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர்கள் எஸ்.பி.கணேசலிங்கம் ஏற்பாடு செய்திருந்த இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 100 இற்கும் அதிகமான தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a comment