கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலகிக்கொள்வர் என முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஊடகங்களுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சகல சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களும் அமைப்பாளர் பதவிகளை விட்டு விலகிக் கொள்ள உள்ளனர்.ராஜினாமா கடிதங்கள் வெகு விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது குழுவினை சுயாதீன ஓர் குழுவாக கருதிச் செயற்படுமாறு கூட்டு எதிர்க்கட்சியின் 51 பேரும் கையொப்பமிட்டு சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் கெஹலிய ரம்புக்வெல்ல அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி மஹிந்தானந்த அலுத்கமகே, குமார வெல்கம, ரமேஸ் பத்திரன, மொஹான் டி சில்வா, லொஹான் ரத்வத்தே, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, விதுர விக்ரமநாயக்க, ரஞ்சித் சொய்சா மற்றும் ஜனக வக்கும்புர ஆகிய கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுன்ற உறுப்பினர்கள் தொகுதி அமைப்பாளர் பதவிகளை துறக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.