மருத்துவர் நியமனப்பட்டியலில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறுகின்றது.
பொதுச் சேவை ஆணைக்குழுவின் காரியாலயத்தில் இந்த சந்திப்பு இடம்பெறுகின்றது.
இந்த சந்திப்பின் பின்னர் இடம்பெறவுள்ள நிறைவேற்று அதிகாரிகள் குழு கூட்டத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் நவீன் டி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர் நியமனப்பட்டியலில் உள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாதவிடத்து தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது இது தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.