உள்ளுராட்சி சபை மற்றும் மாகாண சபை தேர்தல் முறைகளை மாற்றியமைக்கும் பொறுப்பை ஜனாதிபதி தன்னிடம் வழங்கியதாகவும் அதனை மிகவும் அனுகூலமான முறையில் நிறைவேற்றியதாகவும் உள்ளுராட்சி மன்றங்கள் விவகார அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
பாதுக்க – தும்மோதர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சி காலத்தில் பசில் ராஜபக்ஷ நீண்ட கால ஆட்சியில் இருக்கப் போவதாக எதிர்பார்த்து பணியாற்றியுள்ளார். அதனால் தமக்கு மற்றவர்களின் முன் பாவங்களை ஏற்று தேர்தலை நடத்தாமல் பிற்போடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது