முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் டீ.கே.பி.தசநாயகவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு கொழும்பில் வெள்ளை வேண் பயன்படுத்தி 11 இளைஞர்களை கடத்தி அவர்களை காணாமல் செய்தது தொடர்பில் முன்னாள் கடற்படை ஊடகப்பேச்சாளர் கொமாண்டர் டீ.கே.பி.தசநாயக உள்ளிட்ட 6 பேர் குற்றப் புலனாய்வு பிரிவினர் மூலம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.