கேப்பாப்பிலவில் புதைக்கப்பட்ட ஆண் சிசுவின் சடலம் மீட்பு!

959 0

புதைக்கப்பட்டிருந்த நிலையில் பச்சிளம் ஆண் சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து முல்லைத்தீவு – கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் குறித்த ஆண் சிசுவின் சடலம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை மேற்குறித்த பகுதியில் பச்சிளம் சிசு ஒன்றின் சடலத்தை இருவர் புதைப்பதை அவதானித்த அப்பகுதிவாசி ஒருவர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து சிசுவின் தாயென சந்தேகிக்கப்படும் 35 வயதுடைய பெண் ஒருவரையும் அவருக்கு உதவி புரிந்தார் என்ற சந்தேகத்தில் குறித்த பெண்ணின் தாயையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment