தமது அடுத்த அரசியல் தீர்மானத்தை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது மேற்கொள்வதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
மல்வத்துபீட மகாநாயக்கர்களை நேற்று சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை தெரிவித்தார்.
அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலிலும் 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி ஒருவர் உருவாக வேண்டும் என்பதே எதிர்ப்பார்ப்பாகும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி ஒருவரை உருவாக்குவதற்கான முயற்சிகளை ஐக்கிய தேசிய கட்சி முனனெடுக்கிறதா? என்ற கேள்வி தமக்கு ஏற்படுவதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.