ஹட்டன் – என்பீட்லட் தமிழ் வித்தியாலய மாணவர்கள் சிலர் மீது குளவித் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதில் மூன்று மாணவிகள் காயமடைந்து டிக்கோயா – கிளங்கன் மருத்துவனையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.
இன்று காலை (9) பாடாசாலை சென்று கொண்டிருந்த மாணவர்கள் மீதே இந்த குளவி தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த குறித்த குளவி கூட்டை கழுகு ஒன்று தாக்கியதன் காரணமாக குளவிகள் குழம்பி தம்மை தாக்கியதாக காயமடைந்த மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் நிலை பாரதூரமாக இல்லை என கிளங்கன் மருத்துவனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.